வாலிபருக்கு கத்தி குத்து – 3 பேர் கைது..!

கோவை தெற்கு உக்கடம், ஜி.எம். நகரை சேர்ந்தவர் அசன் காதர் .இவரது மகன் சேக் முகமது ( வயது 26) முன் விரோதம் காரணமாக இவரை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் ஷேக் முகமது காயமடைந்தார்.இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் வழக்கு பதிவு செய்து தெற்கு உக்கடம் அக்பர் அலி ( வயது 43) மைதீன் பாட்ஷா (வயது 25) கோட்டை புதூர் அசாருதீன் ( வயது 36) ஆகியோரை நேற்று மாலை கைது செய்தார். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.