விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி கோவை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகளில் இந்து அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பொதுமக்களும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்வற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வாங்கி செல்கிறார்கள் இந்த அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வழிபாடுகள் முடிந்ததும், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்த ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஆண்டுதோறும் ஒவ்வொரு பகுதிகளிலும் உதவி கமிஷனர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அது போன்று இந்த ஆண்டும் மாநகர் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளார்கள். பாதுகாப்புகளை மேம்படுத்துவதற்காக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 7 போலீஸ் உதவி கமிஷர்களுக்கு தலைமையில் ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையிலிருந்து 4 அதிவிரைவுபடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அதிவிரைவு படையினருக்கு ஹெல்மெட் ,லத்தி மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்..
விநாயகர் சதுர்த்தி விழா… பாதுகாப்பு பணிக்காக கோவை விரைந்த அதி விரைவு படை.!!
