கல்லூரி மாணவி எங்கோ மாயம்..

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் .அவரது மகள் ஆதித்யா (வயது 19) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு பஸ்சில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சந்திரசேகர் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.