கோவை அருகில் உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் வாலிபர் ஒருவர் கிணற்றுக்குள் பிணமாக கிடந்தார்.அவர் சென்னையில் வைத்து கொலை செய்யப்பட்டு காரில் கடத்தி வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் போடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த முருக பெருமான் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் ஆகிய 2 பேர் போலீசில் சரணடைந்தனர். விசாரணையில் இறந்தவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இந்த கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் கவனக்குறைவாக செயல்பட்டதாக சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்த நிலையில் கொலை வழக்கில் தடயங்களை மறைத்ததாக தூத்துக்குடியை சேர்ந்த லோகேஷ் ( வயது 21) ஜான்ராஜ் (வயது 19) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் செய்யப்பட்ட கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது.!!
