பைக் மீது தனியார் பஸ் மோதி முதியவர் பரிதாப பலி..

கோவை துடியலூர் வடமதுரை அருகே உள்ள தொப்பம்பட்டி, அருள் ஜோதி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 62 )இவர் நேற்று கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் ஜோஸ் நகர் தொப்பம்பட்டி பிரிவு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் இவரது பைக் மீது மோதியது. இதில் ரவிச்சந்திரன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.இது குறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் யூனியன் பேங்க் ரோட்டை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன் ( வயது 27) மீது வழக்கு பதிவு செய்துள்ளார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.