கோவையில் ரேஷன் அரிசி கடத்தல்..!

கோவை அருகே உள்ள காளப்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் துறை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் மூட்டையில் அரிசி குவித்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சோதனை செய்ததில் அது ரேசன் அரிசி என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் இந்த ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்துவதற்காக அந்த பகுதியில் குவித்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சபரி நாதனை கைது செய்தனர். அங்கிருந்த 100 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது