கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனியில் அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.72 கோடியில் மேம்பால அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது .இதற்காக தூண்கள் அமைக்கும் பணி, தாங்கு தூண்கள் அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் என மொத்தம் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மின்சார கம்பங்களை மாற்றி அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன.. எனவே இன்று ( செவ்வாய்க்கிழமை) முதல் 10 நாட்களுக்கு இந்த ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மக்கள் கவனத்திற்கு… மேட்டுப்பாளையம் சாலையில் இன்று முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.!!
