கோவை ஜூன் 24 நீலகிரி, மாவட்டம் ஊட்டி பக்கம் உள்ள ஏப்ப நாடு, மொரப்பகுட்டியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் தாமினி ( வயது 23 )எம்.பி.ஏ. படித்து முடித்துவிட்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதற்காக சிகிச்சை பெற கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து வந்தனர். சிகிச்சைக்கு பிறகு தாமினி பீளமேட்டில் தான் பணிபுரியும் பணிபுரியும் ஐ.டி. நிறுவனத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வேலைக்கு செல்லவில்லை. எங்கோ மறைவாகிவிட்டார். அவரது செல்போன் “ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தந்தை தேவராஜ் காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண் ஐ.டி.ஊழியர் திடீர் மாயம் .





