கோவை ஜூன் 13 கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், சிவாஜி காலனி ,சிம்சன் நகர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக திருப்பூர் பெருமாள் நகர் பரமசிவம் ( 62 ) வேலாண்டிபாளையம் சதானந்தம் (62) கஸ்தூரி நாயக்கர் பாளையம் தேவராஜ் ( 65 )ஆர் .எஸ் . புரம், பெரியசாமி ( 52) சுந்தராபுரம் கிருஷ்ணன் ( 37 )பூ மார்க்கெட் காளிதாஸ் ( 25 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர் சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 18, ஆயிரமும், சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
மைதானத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் .6 பேர் கைது .
