கோவை ஜூன் 13 கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் ,ஆனந்தா அவுசிங் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் கபிலேஷ் ( வயது 19) கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி. டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .நேற்று இவர் அவரது பாட்டி வீட்டில் கதவை உள்பக்கம் தாழ் போட்டுக் கொண்டு மின்விசிறியில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து இவரது தந்தை பாலமுருகன் சாய் பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் தீபா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை .







