போதை ஊசி -மாத்திரை கடத்தல்: 3 பேர் கைது..

கோவை மே 24 கோவை போத்தனூர் போலீசார் ,நஞ்சுண்டா புரம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அங்கு சந்தேக படும்படி நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 போதை மாத்திரைகள், 55 ஊசி, 9 சிரஞ்சி இருந்தது கண்டுபிடிக்க பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.. 3 பேரும் கைது செய்யபட்டனர். விசாரனையில் அவர்கள் குனியமுத்தூர் செந்தமிழ் நகர் அப்துல் ரகுமான் (23) காந்திநகர் , லத்தீப் ( 29) போத்தனூர் அன்வர் சாதிக் ( 31) என்பது தெரியவந்தது. இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி மாத்திரைகள் விற்பனை செய்து வந்தனர். 3 பேரும் சிறையில் அடைக்கபட்டனர்.