கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில், கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு மான்களை, தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர்.
புத்தூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரண்டு மான்கள் விழுந்து தவிப்பதாக தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக, நிலைய அலுவலர் அணில் குமார் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கிணற்றுக்குள் விழுந்து தவித்துக் கொண்டு இருந்த மான்களை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் உதவியுடன், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட மான்கள் பின்னர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. வனத் துறையினர் மான்களின் உடல் நிலையை பரிசோதித்து, பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
*கோவை அருகே கிணற்றில் தவறி விழுந்த இரு மான்கள் உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர் – வனத் துறையிடம் ஒப்படைப்பு !!!*
