எம்.ஆர். ஸ்ரீனிவாசன் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உதகையில் அவர் இல்லத்தில் நாட்டின் அரசு உயர் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் விஞ்ஞான துறையில் இருந்து அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் எம்.ஆர். ஸ்ரீனிவாசன் அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .
இந்திய முன்னாள் அணு விஞ்ஞானி பத்ம விபூஷன் விருதாளர் எம்.ஆர். ஸ்ரீனிவாசன் (93 ) வயது மூப்பு காரணமாக நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை இயற்கை எய்தினார்.
