கோவை ஜூன் 23 கோவை துடியலூர் பக்கம் உள்ள கே. வடமதுரை, வி. எஸ். கே. நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டி சிவா. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 31 )நேற்று இரவில் இவர் வி .எஸ் .கே . நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயினை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர் .இது குறித்து முத்துலட்சுமி துடியலூர்போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணிடம் செயின் பறிப்பு
