ஐ.பி.எல். சூதாட்டம் ஆசை காட்டி ரூ 4.25 லட்சம் மோசடி. வாலிபர் கைது.

கோவை மே 20

கோவை செல்வபுரம், கல்லா மேடு, வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரது மகன் அர்ஜுனன் ( வயது 35) இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் போட்டி பார்ப்பதில் சொக்கம்புதூர் அன்னை இந்திரா நகர் ,ராஜா கணேஷ் ( வயது 30) என்பருடன் நட்பு ஏற்பட்டது.இவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அர்ஜுனனிடம் ஆசைவாரத்தை காட்டினார் .இதை நம்பி  ரூ 4 லட்சத்து25 ஆயிரத்தைஅவரிடம் கொடுத்தார்.அவர் கூறியபடி அதிக பணம் எதுவும் கொடுக்கவில்லை. ஆசை காட்டி மோசடி செய்து விட்டார். இது குறித்து அர்ஜுனன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா கணேசைநேற்று கைது செய்தனர். இது தொடர்பாக சௌந்தர்ராஜன் என்பவரை தேடி வருகிறார்கள்.