பஸ் நிலையத்தில் திடீர் சோதனை.  16பஸ்களில்ஏர்ஹாரன் பறிமுதல் .

கோவை மே 21 கோவை உக்கடம் பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன .இந்த பஸ்களில்  காற்று ஒலிப்பான் என்று அழைக்கப்படும் ” ஏர் ஹாரன் ” பொருத்தப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. உடனே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்றுஉக்கடம் பஸ் நிலையத்தில் அதிரடி சோதனைநடத்தினார்கள். இதில் 16 பஸ்களில் இருந்த ஏர் ஹாரன் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.