கோவை மே 21
கோவையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் இந்து மக்கள் சேவை இயக்க தலைவராக உள்ளார். இவருக்கு பிரகாஷ் என்ற ஆயுதப்படை போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் பணி முடிந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் தனது வீட்டில் வைத்து பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள கைதுப்பாக்கியை எடுத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று “டமார் “என்ற சத்தத்துடன் அந்த துப்பாக்கி வெடித்தது. அதிலிருந்து குண்டுவெளியேறியது .நல்ல வேளையாக அங்கு யாரும் இல்லாததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இது குறித்த தகவலின் பெயரில் கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் .பின்னர் அவர்கள் போலீஸ் காரர் பிரகாசிடம் கை துப்பாக்கி வெடித்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.