வால்பாறையில் தாமதமாக நடைபெற்ற ஜமா பந்தி

கோவை மாவட்டம் வால்பாறையில் 1434 ஆம் பசலி ஆண்டிற்கான 2024-2025 வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) கோவை மாவட்ட தாட்கோ மேலாளர் மகேஷ்வரி தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் மோகன் பாபு முன்னிலையில் நடைபெற்றது வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் பட்டா, பட்டா பெயர்மாற்றம், தாட்கோ கடன், வீடு வேண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மனுதாரர்களிடமிருந்து பெறப்பட்டது மேலும் காலை பத்து மணிக்கு நடக்கவிருந்த ஜமாபந்தி மதியம் 11.45 மணிக்கு தாமதமாக துவங்கியதால் மனுதாரர்கள் நீண்டநேரம் காத்திருந்து மனுக்களை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது