கோவை மே 20 கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர்வெற்றிச்செல்வி ,சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோர் நேற்று அங்குள்ள நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்ததம்பதியை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 கிராம் கஞ்சா, 135 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக கவுண்டம்பாளையம் அண்ணா நகர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சுஜித் குமார் என்ற அஜித் குமார் ( வயது 25 )அவரது மனைவி வைஷ்ணவி ( வயது 25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கஞ்சா -போதை மாத்திரை விற்பனை செய்த கணவன் – மனைவி கைது.
