கோவை மே 20 கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பின் புறம் உள்ள வனப்பகுதியில் ஒரு பெண் யானை உடல் நல குறைவால் சோர்வுடன் கடந்த 19-ஆம் தேதி நின்று கொண்டிருந்தது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் மூலம் அந்த யானையை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நேற்று 3 – வது நாளாக வன கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் நரம்பு வழி சிகிச்சை மூலமாகவும், ஊசி மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.மேலும் மருத்துவர்களின் அறிவுரையின்படி யானைக்கு பசுந்தீவனம், பழங்கள், மற்றும் தண்ணீர் உணவாக கொடுக்கப்பட்டது. யானை நன்றாக உணவு எடுத்துக் கொண்டது. மேலும் யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உடல்நலம் குன்றிய காட்டு யானைக்கு 3-வது நாளாக சிகிச்சை.
