4 பெண்கள் திடீர் மாயம். போலீசில் புகார்.

கோவை மே 19 கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கொண்டை கவுண்டன் பாளையம், பாரி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி விசாலாட்சி ( வயது 36) இவர் கடந்த 13-ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். இது குறித்து அவரது கணவர் கதிரேசன் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் செய்துள்ளார். இதேபோல சூலூர் பக்கம் உள்ள பட்டணம் புதூர், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி காயத்ரி ( வயது 21) இவர் கடந்த 16-ஆம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திருப்பவில்லை. இது குறித்து இவரது கணவர் சரவணன் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.இதே போல சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் செல்லதுரை .இவரது மகள் ரதி (வயது 19) இவர் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள செம்மாண்டம் பாளையத்தில் வசிக்கும் தனதுசித்தப்பா வீட்டுக்கு விடுமுறைக்கு வந்திருந்தார்.கடந்த 17ஆம் தேதி வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது சித்தப்பா முனிசாமி கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..கிணத்துக்கடவு பக்கம் உள்ள தேவராயபுரத்தைச் சேர்ந்தவர் துரைசாமி அவரது மகள் அர்ச்சனா ( வயது 18)இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து தாயார் தங்கமணி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.