அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சி கொடி நட்டிய நிர்வாகிகள் மீது வழக்கு.

கோவை மே 19 கோவை சூலூர் – நீலாம்பூர் ரோட்டில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சி கொடி கம்பமும், பேனர்களும் வைக்கப்பட்டிருப்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். கொடி கம்பமும்,பேனர்களும் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சூலூர் மண்டல தலைவர் சக்திவேல் முருகன், நிர்வாகி நம்மாறன் உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.