டாஸ்மாக் கடைகளில் கள்ள சந்தையில் மது விற்ற 8பேர் கைது.

843 பாட்டில்கள் பறிமுதல் .கோவை மே 17கோவையில் உள்ள டாஸ்மாக்கடைகளிலும், பார்களிலும்,குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாக சட்டவிரோதமாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று ஆர். எஸ். புரம் , லாலி ரோடு மருதமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மதுபாட்டில்களை தரையில் புதைத்து வைத்து விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம், சிறு களத்தூரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 28),திருவாடனை பக்கம் உள்ள கடம்பா குடியைசேர்ந்த முனீஸ்வரன் (வயது 26 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பதுக்கி வைக்கப்பட்ட 159 மது பாட்டில்களும்,மது விற்ற பணம் ரூ. 8, 240 பறிமுதல் செய்யப்பட்டது.இதே போலஅங்குள்ள மற்றொரு டாஸ்மாக் கடை நடத்திய சோதனையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த கணேசா ( வயது 44) ஆர் எஸ் புரம் ,லாலி ரோடு ஹரிஹர நரசிம்மன் (வயது 44 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .169 மது பாட்டில்களும், பணம் ரூ.12 ஆயிரத்து 980 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. வெரைட்டி ஹால் ரோடு டாஸ்மாக் கடை அருகே நடத்திய சோதனையில் சமத்துவபுரம் துரைராஜ் (வயது26) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கருப்பையா ( வயது49) புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் விஜய் ( வயது26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 159 மது பாட்டில்களும் மது விற்ற பணம் ரூ 10 ஆயிரத்து 225 பறிமுதல் செய்யப்பட்டது..மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோடு – ஏ.சி.சி. சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடை அருகே திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 356 மது பாட்டில்களும்,மது விற்ற பணம் ரூ 14, 280 பறிமுதல்செய்யப்பட்டது .இது தொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் பாலமுருகன் (வயது 30) கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.