சர்வதேச அளவில் ஊடக சுதந்திரம் குறித்த குறியீடு – இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

புதுடெல்லி: சர்வதேச ஊடக சுதந்திரம் குறித்த குறியீடு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்(ஆர்எஸ்எப்) என்ற அமைப்பு மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

இந்த குறியீடு, பத்திரிகையாளர்களின் சுதந்திரம், ஊடகங்களுக்கான சூழல், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. இதில் பின்லாந்து, எஸ்டோனியா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.

இந்தியாவுக்கு இந்த ஆண்டு 151வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 159 வது இடத்தில் இருந்தது. தற்போது கொஞ்சம் முன்னேறியுள்ளது. இந்தியாவில் மொத்தம் 900 தொலைக்காட்சிகள் உள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்டவை செய்தி தொலைக்காட்சிகள். 1 லட்சத்து 40,000 பத்திரிகைகள் வெளி வருகின்றன. இதில் நாளிதழ்கள் மட்டும் 20,000 உள்ளன. பத்திரிகைகளுக்கு 39 கோடி வாசகர்கள் உள்ளனர்.