டெல்லி: இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வஙகதேசத்தவரை வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது.
பஹல்காம் தாக்குதலையொட்டி மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அவ்வகையில் பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் உள்ளோர் அனைவரும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அதைப்போல் வங்கதேசத்தில் இருந்தும் ஏராளமானோர் சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஊடுருவி நாட்டின் பல பகுதிகளில் தங்கி உள்ளனர். அவர்களை கண்டறிந்து மீண்டும் வங்கதேசத்துக்கு அனுப்பும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது
ஏற்கனவே இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை ஆஈசகம் வங்கதேச்த்துக்கு தெரியப்படுத்தியுள்ளது. வங்கதேச அதிகாரிகள் வெளியேற்றப்படுவோரின் ஆவணங்களைசரி பார்த்தபின் தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க சம்மதித்துள்ளனர்.