கோவை: கோவை வைதேகி நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தனர். கோவை வைதேகி நீர் வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
பூலுவபட்டியைச் சேர்ந்த சுரேஷ் அபிமன்யூ (33) நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.