போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

கோவை மே 15

கோவை மாவட்டம் ஆழியார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது  சிறுமியை பாலியல் தொல்லை  செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இதன் பேரில்போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கலக்குறிச்சி, ஜெ ஜெ நகர், பெரியசாமி மகன் தினேஷ் குமார்(வயது25) என்பவரைபோக்சோ சட்டத்தின் கீழ்கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேற்கண்ட நபர மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட கலெக்டர்  பவன்குமார் க.கிரியப்பனவர் மேற்கண்ட நபர் பாலியல்குற்றவாளி   என கருதி தினேஷ்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின்படி பாலியல் வன்புணர்ச்சி வழக்கு குற்றவாளியான தினேஷ்குமார்(25) என்பவரை சிறையில் இருந்த பொழுது குண்டர் தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கை கீழ்  எடுக்கப்பட்டது.இதற்கான உத்தரவு அவருக்கு நேற்று வழங்கப்பட்டது.