காவல்துறையில் பெண்கள் 11-வது தேசிய மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது.இதில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 140 மகளிர் காவல் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
நாடு முழுவதிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பெண்களின் பங்கை அங்கீகரித்து ஊக்குவிக்கும் விதமாகவும்,பெண் காவலர்களை கவுரவிக்கும் வகையில் 11-வது தேசிய மாநாடு இன்றும் , நாளையும் வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நடக்கிறது.
காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்துடன் இணைந்து இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய பெண் காவல் அமைப்புகளுக்கு இடையிலான உரையாடல், கலந்தரையாடல் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 140 மகளிர் காவல் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை மத்தியஉள்துறை அமைச்சகத்தின் இணை மந்திரி நித்தயிானந்த் ராய் தொடங்கி வைக்கிறார். மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.