டிரான்​ஸ்​பார்​மர் வெடித்து நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து – ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்.!!

நெய்​வேலி அனல் மின் நிலை​யத்​தில் நேற்று டிரான்​ஸ்​பார்​மர் வெடித்து தீ பரவியது.

இதில் ரூ.1 கோடி மதிப்​பிலான பொருட்​கள் சேதமடைந்​தன. கடலூர் மாவட்​டம் நெய்​வேலி​யில் உள்ள என்​எல்சி இந்​தியா நிறு​வனத்​தின் 2-ம் அனல் மின் நிலைய விரி​வாக்​கத்​தில் நேற்று அதி​காலை டிரான்​ஸ்​பார்​மர் வெடித்து தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்​கள் 4 வாக​னங்​களில் சென்று தீயை அணைத்​தனர்.

விபத்​தின்​போது என்​எல்சி அதி​காரி​கள், ஊழியர்​கள், ஒப்​பந்த தொழிலா​ளர்​கள் யாரும் அங்கு பணி​யில் இல்​லாத​தால், அசம்​பா​விதம் தவிர்க்​கப்​பட்​டது. அதிக வெப்​பம் காரண​மாக டிரான்​ஸ்​பார்​மர் வெடித்து விபத்து நேரிட்​டிருக்​கலாம் என்று கூறப்​படு​கிறது. இந்த விபத்​தில் காப்​பர் வயர் உட்பட ரூ.1 கோடி மதிப்​பிலான பொருட்​கள் எரிந்து சேத​மாகி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

மேட்​டூர் அனல் மின் நிலை​யத்​தில் பைப் லைன் உடைந்து கால்​வாய்
வழி​யாக டீசல் வெளி​யேறு​வதை தடுக்க உலர் சாம்​பல் கொட்​டப்​பட்டது. மேட்​டூர் அனல் மின் நிலை​யத்​தின் முதல் பிரி​வில் 840 மெகா​வாட், 2-வது பிரி​வில் 600 மெகா​வாட் மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. இந்​நிலை​யில், முதல் பிரி​வில் 210 மெகா​வாட் உற்​பத்​தித் திறன் கொண்ட முதல் அலகில் டீசல் பைப் லைன் நேற்று காலை திடீரென உடைந்​து, கால்​வாய் வழி​யாக டீசல் வெளி​யேறியது. தகவலறிந்த அதி​காரி​கள் மற்​றும் தீயணைப்பு துறை​யினர் அங்கு வந்​தனர்.

கால்​வாய் வழி​யாக டீசல் வெளி​யேறி, காவிரி ஆற்​றில் கலக்​காமல் இருக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. பொக்​லைன் வாக​னத்​தைக் கொண்டு உலர் சாம்​பலை கால்​வாய் பகு​தி​யில் நிரப்​பி, டீசல் வெளி​யேறாமல் தடுத்​தனர். மேலும், பைப் லைன் பகு​தி​யில் தீ விபத்து நேரி​டா​மல் இருக்க தண்​ணீரை பீய்ச்சி அடித்​தனர். தொடர்ந்​து, உடைந்த பகு​தியை சரிசெய்​யும் பணி​யில் ஊழியர்​கள் ஈடு​பட்​டனர்.

உரிய நேரத்​தில் விபத்​தைக் கண்​டறிந்து நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​ட​தால், பெரும் அசம்​பா​விதம் தவிர்க்​கப்​பட்​டது. தீயணைப்​புத் துறை​யினர் அப்​பகு​தி​யில் தொடர் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அப்​பகு​திக்கு ஊழியர்​கள் செல்ல தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், அனல் மின் நிலைய முதல் பிரி​வின் முதல் அலகில் மின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டது. பைப் லைன் சரி செய்த பிறகு மீண்​டும் மின் உற்​பத்தி தொடங்​கியது.