கோவை மே 10 பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ரயில் எண் (56110) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் 8 -25 மணிக்கு கிணத்துக்கடவுவுக்கும்,8:55 மணிக்கு போத்தனூர் சென்றடைந்து, 9-25 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்து அடைகிறது. இந்த ரயிலை கல்லூரி மாணவ – மாணவிகள் வேலைக்கு செல்வோர் ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் .காலை 8மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயிலை காலை 7:25 மணிக்கு புறப்பட்டு 8- 35 மணிக்குள் கோவை நிலையத்துக்கு செல்லும் வகையில் நேரத்தை மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர் .அதன்படி இந்த ரயிலின் நேரம் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இது தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம்வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருகிற ஜூலை மாதம் 11-ம் தேதி முதல் பொள்ளாச்சி – கோவை ரயில் காலை 7:50 மணிக்கு பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டு கிணத்துக்கடவுக்கு காலை 8 – 14 மணிக்கும், போத்தனூர் 8 – 37 மணிக்கும் சென்று கோவைக்கு 8- 55 மணிக்கு சென்றடைகிறது. என்று கூறியுள்ளது நேரத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி – கோவை ரயில் நேரம் மாற்றம்.பயணிகள் மகிழ்ச்சி.
