ராணுவ தலைவர் மீது அதிருப்தி… விரக்தியில் பாகிஸ்தான் மக்கள்..!

ந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய ராணுவம் ‘ ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ஒரு முக்கிய செயல்பாட்டை நடத்தியது.

இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிடிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரில் இயங்கும் பயங்கரவாத குழுக்களை நேரடியாக தாக்கியது.

இந்த தாக்குதலில் லஷ்கர்-ஈ-தய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது போன்ற அமைப்புகளுடன் தொடர்புடைய குறைந்தபட்சம் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இந்திய தகவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானுக்குள் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் மீது விரக்தி தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களும், முநிர் நாட்டை இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தவறிவிட்டார் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் பாகிஸ்தான் ராணுவ தலைவர் முனீர் இந்தியாவின் தாக்குதலை இடைமறித்து அழிக்கவும் அல்லது பதிலடி தாக்குதல் நடத்தவும் எந்த திட்டமும் கைவசம் வைத்திருக்கவில்லை என்றும் ஒரு நாட்டின் ராணுவ தலைவர் இவ்வளவு மோசமாக செயல்படுவது நாட்டின் இறையாண்மைக்கு மிகப்பெரிய ஆபத்து என்றும் பாகிஸ்தான் மக்களே கொந்தளித்து வருகின்றனர்.

இந்தியா போன்ற வலிமையான நாட்டை சமாளிக்க குறைந்த பட்சம் செயல்நிலை திட்டமாவது ராணுவ தலைவருக்கு இருக்க வேண்டும் என்றும் ஆனால் அவர் தனது ஈகோ காரணமாகவும், அரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நாட்டிற்கு துரோகம் செய்கிறார் என்றும் அவரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பொங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ தலைவர் முனீர் கைது செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல் கூறுகின்றன

இந்நிலையில், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாஃப் கட்சி, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான்-இந்தியா இடையிலான பதற்றம் தொடர்பான அரசு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மறுத்துள்ளது.

இது குறித்து PTI கட்சி தெரிவித்தது: “தேசிய ஒருமித்த அணியை உருவாக்க அரசாங்கம் உண்மையுடன் முயற்சிக்கவில்லை. முக்கியமான தலைவர்களை ஆலோசனைகளில் பங்கேற்கவோ அழைக்கவோ அரசாங்கம் தயாராக இல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.