கோவை மே 9 கோவை விமான நிலைய இயக்குனர் சம்பத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காஷ்மீர் மாநிலம் பஹல் காம் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது .அந்த வகையில் “ஆபரேஷன் சிந்துர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கர வாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துகிறது .இதை யடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் உத்தரவின்படி கோவை விமான நிலையத்தில் தற்போது வழக்கத்தை காட்டிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு சோதனைகள் செய்ய நேரம் அதிகமாக ஆகிறது .எனவே பயணிகள் தங்கள் விமான பயணத்திற்காக கடைசி நேரத்தில் வருவதை தவிர்க்க வேண்டும். அத்துடன் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக விமான நிலையம் வந்து தங்கள் உடமைகளை சோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவர் அவர் கூறினார்.
விமான பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர வேண்டும் .அதிகாரி தகவல்.
