இந்தியாவுக்கு ஆதரவு அளித்த சவூதி அரேபியா… கைகொடுக்கும் உலக நாடுகள்.!!

ந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் வலுத்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் இந்தியாவுக்கு வருகை தந்து, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆதரவு தெரிவித்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தைக் குறைப்பது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்துள்ள எஸ். ஜெய்சங்கர், அல்-ஜுபைரை சந்தித்து, பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்கொள்வது குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்ததாகக் கூறினார். இதேபோல் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் இந்தியாவுக்கு வந்து ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசி, போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா முழுமையாக அழித்தது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தான் ராணுவம் இதை பொறுக்க முடியாமல் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் என இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால் இந்திய ராணுவம் அனைத்தையும் முறியடித்தது.

பாகிஸ்தான் விடிய விடிய நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக அழித்தது. பாகிஸ்தானின் 5 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும் பாகிஸ்தானின் வான் எச்சரிக்கை அமைப்புகள் அனைத்தையும் இந்தியா தாக்கி அழித்தது.

மறுபக்கம பாகிஸ்தான் மீது இந்தியாவின் முப்படைகளும் அதிதீவிர தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானின் ராவல்பிண்டி, பெஷாவர், கராச்சி, குவொட்டா என அனைத்து நகரங்களிலும் இந்திய ராணுவம் இடைவிடாமல் தாக்குதல் நடத்தியது. இந்திய கடற்படை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா இடைமறித்து அழித்த நிலையில், இந்தியாவின் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஒன்றை கூட பாகிஸ்தானால் தடுத்து நிறுத்த முடியவில்லை.இந்தியாவின் மும்முனை தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் நிலைகுலைந்து போயுள்ளது. இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷேரீப் பதுங்கு குழியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் பயந்து ஓடி விட்டனர். ஒட்டுமொத்தத்தில் இந்தியாவை தேவையின்றி சீண்டிய பாகிஸ்தான் அதற்குரிய தண்டனையை இப்போது அனுபவித்து வருகிறது.