அரசு கார் கண்ணாடி உடைப்பு.

கோவை மே 6 கோவை உக்கடம், துர்ககாலால் வீதியை சேர்ந்த முகமது யூசுப் ( வயது 48) தெற்கு தாலுகா அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவர் அரசு காரில் உக்கடம் எஸ். எஸ். கோவில் வீதியில்சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து முகமது யூசுப் உக்கடம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார்அதே பகுதியை சேர்ந்த முஜிபுர் ரகுமான் என்பவர்மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.