போர் மூளும் அபாயம்… அவசர அவசமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கடற்படை தலைவர்கள்.!!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது.

குப்வாரா, பரமுல்லா, பூஞ்ச், ராஜௌரி, மற்றும் அக்னூர் உள்ளிட்ட எட்டு பகுதிகள் தாக்கபட்டுள்ளன. இந்திய இராணுவமும் உடனடியாக, சரியான முறையிலும் பதிலடி வழங்கியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலாக, இந்தியா பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்யும், மற்றும் மூலமாக கொண்டு செல்லும் செயல்களை முற்றிலும் தடை செய்துள்ளது. வாணிபத்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசு அறிவிப்பில், தேசிய பாதுகாப்பும், பொது நலனும் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, அடோரி சோதனை நிலையம் மூடப்பட்டது. பாகிஸ்தான் நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் SAARC விசா விலக்கு திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு நாடு விட்டு வெளியேற 40 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் 1960ம் ஆண்டில் செய்த இந்தியா-பாகிஸ்தான் சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்துள்ளார். இதற்கு முன்பு நேற்று கடற்படை தலைவர் தினேஷ் திரிபாடி, அரபிக்கடல் பாதுகாப்பு நிலை குறித்து பிரதமரை சந்தித்திருந்தார். அடுத்தடுத்து விமானப்படை, கடற்படை தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்திருப்பதால் எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் அரசும் ராணுவமும் இன்று அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேசிய பாதுகாப்பு நிலை குறித்து ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.