மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 194 நிறுவனங்கள் மீது நடவடிக்கை.

கோவை மே 2 மே தினமான நேற்று விடுமுறை அளிக்காத 194 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .கோவை தொழிலாளர் துறை உதவிஆணையாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் தலைமையில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது .மே தினமான தேசிய விடுமுறை தினத்தன்று விடுமுறை ஆய்வாளர்களிடம் உரிய படிவத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதா? தொழிலாளர்களுக்கு உரிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளதா? அல்லது அன்றைய தேதியில் தொழிலாளர்கள் பணி புரிய அனுமதிக்கப்பட்டிருந்தால் உரிய படிவம் வழங்கப்பட்டுள்ளதா? என்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன .இதில் மொத்தம் 236 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு உரிய படிவத்தில் முன் அறிவிப்பு செய்யாமலும் தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதித்த 187 கடைகள் மற்றும் நிறுவனங்கள் 104 உணவு நிறுவனங்கள், 3 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட 194 நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து குறைந்தபட்சம் ரூ 500-ல் இருந்து அதிகபட்சமாக ரூ 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்..இந்த நிறுவனங்களில் அடுத்த மாதமும் ஆய்வு செய்யப்பட்டு உரிய மாற்று விடுப் போ அல்லது இரட்டிப்பு ஊதியமோ வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டு முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.