நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சி உட்பட நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் மாபெரும் தூய்மை நெகிழி பிளாஸ்டிக் சேகரிக்கத்து தொடங்கப்பட்டது.

உதகை ஏப்ரல் 21

நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட அருவங்காடு, ஜெகதளா ,பெரிய பிக்கட்டி ,பெடட்டி சங்கம், கட்டப்பெட்டு பகுதிகளில் 19/04/2024 மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவின்படி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகமது ரிஸ்வான் அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் செந்தில்குமரன் பேரூராட்சி தலைவர் பங்கஜம் ஆகியோர் தலைமையில்  பகுதியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் மாபெரும் தூய்மை பணிகள் தொடங்கப்பட்டு வீதிகள் சாலை பகுதிகளில் வீசப்படும் குப்பைகளை எடுத்து மக்குன குப்பை, மக்காத, குப்பைகளை பிரித்து, தனித்தனியாக சேகரித்து வாகனத்தில் ஏற்றி பகுதிகளை தூய்மைப்படுத்தினர், மற்றும் சாலை ஓரம் பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் காட்டுச் செடிகள் அகற்றும் பணிகள் தூய்மை பணியாளர்கள் முற்றிலும் அகற்றும் பணி நடைபெற்றது, 7வது வார்டு உறுப்பினர்கள் யசோதா ,சஞ்சீவ் குமார் மோசஸ் பேரூராட்சி அலுவலர்கள் தூய்மைப் பணி மேற்பார்வையாளர் முகமது ரபிக், பில் கலெக்டர் ராமகிருஷ்ணன் குடிநீர் உதவி ஆய்வாளர் சுரேஷ் முரளி தூய்மை பணி காவலர்கள் ஆகியோர் அப்பகுதி சாலைகளை தூய்மைப்படுத்தினர் மற்றும் சாலை ஓரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், மது பாட்டில்கள் சிப்ஸ் , பிஸ்கட் பாக்கெட்டுகள், குளிர்பான அட்டை பாக்ஸ்கள், பலவகை தூள்கள் போன்ற பல மக்காத மக்கும் குப்பைகள் சாலைகளில் வீசப்பட்டதை முற்றிலும் தூய்மைப்படுத்தி அந்தப் பகுதி முழுவதையும் தூய்மை பகுதியாக மாற்றினர்..