கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையம், பத்மாவதி நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 23) எம் .காம். பட்டதாரி .நேற்று அய்யப்பன் உடல் நலம் குன்றிய தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பிரியதர்ஷினி இல்லை. எங்கோ மாகி விட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இது குறித்து அய்யப்பன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் உட்ரோ வில்சன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
முதுநிலை பட்டதாரி பெண் எங்கோ மாயம்..!
