கோவை கெம்பட்டி காலனி, பாளையந் தோட்டத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். இவரது மகன் கோகுல் கிருஷ்ணன் (வயது 24) நகை தொழிலாளி. நேற்று இவர் அங்குள்ள எலக்ட்ரிக் கடை அருகே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ஒலிபெருக்கியை சத்தமாக வைத்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கெம்பட்டி காலனி கள்ளுக்கடை வீதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற ஜப்பான் (வயது 20) பாளையந் தோட்டம் சந்துரு (வயது 24) நாகராஜ் என்ற நல்லமுடி நாகராஜ் ( வயது 20) சூர்யா என்ற சூட்டிப் சூர்யா ( வயது 25) கெம்பட்டி காலனி, திருவள்ளுவர் நகர் சஞ்சய் ( வயது 19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் இன்று நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
நகை தொழிலாளி குத்திக் கொலை – 5 பேர் கைது..!









