கோவை அருகே உள்ள கோவை புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா (வயது 72) இவர் கடந்த 22ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை அவரது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக வேலைக்கார முத்துலட்சுமி கீதாவுக்கு தகவல் கொடுத்தார் .வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகளை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் கீதா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு..!









