பங்குனி உத்திர ஆராட்டு விழா: சபரி மலையில் பக்தர்களுக்கு அனுமதி..!

ங்குனி மாதம் இன்றுடன் தொடங்குகிறது. இந்நிலையில் வருடா வருடம் பங்குனி நடைபெறக்கூடிய பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டதும் கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றினார். தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஐய்யப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வரும் 19-ந்தேதி வரை அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று கோயில் தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பங்குனி மாதம் நடைபெறக்கூடிய பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பங்குனி உத்திர ஆராட்டு விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த பிப்ரவரி 12-ந் தேதி திறக்கப்பட்டது, அப்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 5 நாட்கள் பல்வேறு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 17-ந்தேதி நடை அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.