85 மின்வாரிய ஊழியர்கள் கைது..!

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாட்டா பாத் மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.. முறையாக காவல்துறை அனுமதி பெறாமல் நடத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காளிமுத்து ( 54 )சுந்தர்ராஜன் (51 | ரத்தினகுமார் (59) விஜயன் ( 45 ) உட்பட 85 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்..