தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி சார்பில் வணிகவரி அலுவலர், துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 2 முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. கோவையில் இந்த தேர்வு எழுத 103 பேர் தகுதி பெற்றனர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக கோவை பெரிய கடை வீதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு நேற்று காலை 9 – 30 மணிக்கு தொடங்கியது. இதனால் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் காலை 8 மணியிலிருந்து தேர்வு மையம் முன் குவிந்தனர் .பின்னர் அவர்கள் 9 மணிக்கு தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மதியம் 12:30 மணிக்கு முடிவடைந்தது. தேர்வை மொத்தம் 83 பேர் எழுதினர் . 20 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நியமிக்கப்பட்ட தனி ஆய்வு அலுவலர் தேர்வு மையத்தை கண்காணித்தனர். தேர்வர்கள் தேர்வு அறைக்கு செல்போன், மின்னணு கடிகாரம், கால்குலேட்டர் போன்ற மின்னணு பொருள்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வை முன்னிட்டு தேர்வு மையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வர்களுக்கு உதவுவதாக கோவை கலெக்டர் அலுவலகம், காந்திபுரம் பஸ் நிலையம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர்அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
குரூப்-2 தேர்வு கோவையில் 83 பேர் எழுதினர்.!







