கோவை கிளப்பில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 8 பேர் கைது.. !

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு பொழுதுபோக்கு கிளப்பில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக செல்வபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கவுண்டம்பாளையம் நாகராஜன் (வயது 34) அவிநாசி, ஆட்டையம்பாளையம் நாக செல்வேந்திரன் ( வயது 36 )தஞ்சாவூர் செல்வகுமார் (வயது42) செல்வபுரம் மாரிமுத்து (வயது 39) சேரன்மாநகர் தனசேகர பாண்டியன் ( வயது 31 )திண்டுக்கல் வேடசந்தூர் வேல்முருகன் ( வயது40) சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பாஸ்கரன் (வயது35) பெர்க்மான்ஸ் (வயது 37 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. அவர்களிடமிருந்து சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட பணமும், சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.