பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலக முன் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய சாய்பாபா கோவில் சேர்மன் ராஜ் நகர், ஸ்டாலின் பிரபு ( 30) காமராஜபுரம் காயத்திரி (38) மதுக்கரை பாபு (53) பி. என். புதூர் சின்னசாமி ( 46 ) வடவள்ளி மணி பிரகாஷ் ( 27 ) உட்பட 16 ஆண்களும் 47 பெண்களும் 2 திருநங்கைகளும் கைது செய்யப்பட்டனர். மாலையில் இவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்..
தூய்மை பணியாளர்கள் 70 பேர் கைது..!






