கோவை மே 27 கோவை மாநகரகாவல்துறையில் பணியாற்றிவந்த 7 இன்ஸ்பெக்டர்கள்நிர்வாக காரணங்களுக்காக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-கோவை போலீஸ் கட்டுபாட்டு அறை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நெப்போலியன் குனியமுத்தூர் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வந்த பாஸ்கரன் வெரைட்டி ஹால் ரோடு குற்ற பிரிவுக்கும் ,கனியன் சுந்தராபுரத்தும், அங்கு பணியாற்றி வந்த வினோத்குமார் மாநகர குற்ற பிரிவு ( சி.சி. பி, 2 க்கும்) ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் பீளமேடு சட்டம் – ஒழுங்குக்கும், அங்கு பணியாற்றி வந்த கந்தசாமி ரேஸ்கோர்ஸ் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய ராணி மாநகர கிழக்கு பகுதி மகளிர் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம்.
