கோவையில் கேரள லாட்டரி டிக்கெட் விற்ற 7பேர் கைது .

கோவை மே 7

கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் உப்பார வீதி – வன்னியர் வீதி சந்திப்பில் நேற்று இரவுரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக சுக்கிரவார்பேட்டை சேர்ந்தஜெயபெருமாள் (வயது 49 )எம். . என். ஜி வீதியைச் சேர்ந்த பாலசேகரன் ( வயது 49) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.துடியலூர் போலீசார் மேட்டுப்பாளையம் ரோடு ராக்கிபாளையம் சந்திப்பில் நடத்திய சோதனையில் வீரபாண்டி பிரஸ் கானியைச் சேர்ந்த பாபு (வயது 51) என்பவர் கைது செய்யப்பட்டார். சரவணம்பட்டி போலீசார் கணபதி ராஜ வீதியில் உள்ள ஒரு பேக்கரி அருகே திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக பதி கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த ரவி (வயது 52) கைதானார் இவர்களிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகள், பணமும் ,செல்போன் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டது. இதே போல காட்டூர் போலீசார் காந்திபுரம்  டவுன் பஸ் நிலையம் அருகே நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போதுகேரள மாநிலம் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக எஸ். எஸ். குளம். பக்கம் உள்ள கோட்டைப்பாளையம், பாலாஜி நகரை சேர்ந்த நீலமேகம் ( வயது 63) என்பவரை கைது செய்தனர் இதே போல சாய்பாபா காலனி போலீசார் என் எஸ்.ஆர்.ரோடு பகுதியில் கேரளா லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த கவுண்டம்பாளையம் ஸ்ரீதேவி நகரை சேர்ந்த முகம்மது பஷீர் (வயது 56) என்பவரை கைது செய்தனர். இடையர்பாளையம் – வடவள்ளி ரோட்டில் லாட்டரி டிக்கெட் விற்றதாகஅங்குள்ள தேவாங்கு நகரை சேர்ந்த மகேந்திரன் ( வயது27) கைது செய்யப்பட்டார்.இவர்களிடமிருந்து கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள், பணம், செல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.