கோவை ஆர். எஸ். புரம், தடாகம் ரோட்டில் உள்ள ராயப்பா புரத்தில் ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர். எஸ். .புரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சீட்டுவிளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த செந்தில்குமார் (46) கணேசன் ( 45 ) சண்முகசுந்தரம் (46) ரகுமார் ( 50 ) திருமுருகன் (50 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட பணமும் சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் – 6 பேர் கைது..!
