தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் புதிய நபர்களை கட்சியில் இணைப்பது மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து தங்கள் கட்சிக்கு வரவழைப்பது போன்ற பணிகளும் நடைபெறுகிறது.
அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான சேலத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக உரிமை மீட்பு குழுவில் இணைந்துள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் இருப்பதால் இருதரப்பினரும் மாறி பேசிக்கொள்வதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லை. இந்நிலையில் திடீரென சேலத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் தலைமையில் அவருடன் இணைந்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் அவர்களின் திடீர் விலகலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.