கோவை மே 3
கோவை செல்வபுரம் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று செல்வபுரம் ஐ. யு. டி. பி.காலனி பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேக படும்படிநின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 160 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக உக்கடம் எல். எம்.ஆர் வீதியைச் சேர்ந்த முகம்மது அனாஸ் ( வயது 30) செல்வபுரம், செட்டி வீதி, சாவித்திரி நகரை சேர்ந்த ரோஹித் வர்ஷி (வயது 26) சொக்கம்புதூர் கோவிந்தசாமி லே அவுட் ராம் பிரசாத் ( வயது 27) என்பது தெரியவந்தது. இதேபோல போத்தனூர் போலீசார் வெள்ளலூர், ஹவுசிங் யூனிட் பகுதியில் மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடமிருந்து 255 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள்வெள்ளலூர், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சூர்யா (வயது 31) கோவை புதூர் | மகாலட்சுமி நகரை சேர்ந்த சல்மான் கான் (வயது 24) என்பது தெரிய வந்தது.இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..